நடிகர் எம்ஜிஆர்
இன்றைக்கும் தமிழ் சினிமாவின் நடிகர்களாக வலம் வரவேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருப்பது எம்ஜிஆர். இவரது முகபாவனை, உடைகள், கண்ணாடிகள், நடித்த திரைப்படங்கள் என அனைத்திலும் மக்களை ஈர்த்தவர்.

அறிமுகம்
தற்போது இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் புகழ்பெற்ற வி.எஸ் குகநாதனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர். குகநாதனின் எழுதும் திறமையை கண்டு வசனங்களை எழுத வைத்து அறிமுகப்படுத்தினார்.

பேட்டி
தற்போது அவர் ஒரு பேட்டியினை அளித்துள்ளார். அதில் அவர் எம்ஜிஆர் குறித்து அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் வந்துள்ளார். அப்போது வி.எஸ் குகநாதன் மேடையில் ஏறி நடிக்க தெரியாதவருக்கு எதற்கு வரவேற்பு என அவர் முன்னால் கூறியுள்ளார்.

கை தட்டல்
மீண்டும் மீண்டும் அவரை பார்த்து நடிக்க தெரியாது என கூறியுள்ளார். எம்ஜிஆர் முகம் கோபத்தில் சிவந்தது. இதனை கேட்டு அங்கு இருந்தவர்கள் கைகளை தட்டினர்.

விளக்கம்
எம்ஜிஆர் அவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாது என்று விளக்கம் அளித்துள்ளார். அவர் சொன்னவுடன் அப்போது அரங்கமே அதிர்ந்ததாக தெரிவித்தார்.