14-year-old girl: 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை! மூன்று பேர் கைது!

0
39

திருமணம்

முற்காலத்தில் இருந்தே குழந்தை திருமணங்கள் தடை செய்த பிறகும் இன்றளவும் இப்படிப்பட்ட திருமணங்கள் நடந்து கொண்டு வருகின்றன. பலர் போராடி இந்த குழந்தை திருமணங்களை தடை செய்த பிறகும் சிலர் இதை வழக்கமாக நடைமுறை படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.

புகார்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீட்சிதர் சோமசேகர். இவரது மகள் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு 24 வயதை கொண்ட தீட்சிதர் ஒருவர் இந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதை கண்டித்து இவர்கள் மீது புகாரானது எழுந்துள்ளது.

அலுவலர்கள்

திருமணம் ஆனது குறித்து அந்த சிறுமியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் விசாரித்தனர். திருமணமான சிறுமியையும், அவரது தந்தையையும் போலீசார் கடலூர் அழைத்து வந்துள்ளனர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் ஆன சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கைது

குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சிறுமியின் தந்தையையும், திருமணம் செய்த நபரையும், அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here