Moeen Ali! : மொயின் அலிக்கு கிடைக்கும் உயரிய விருது!

0
87

மொயின் அலி

கடந்த வருடம் மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். இவர் 64 டெஸ்ட் போட்டிகளில் 195 விக்கெட்டுகள், 2914 ரன்கள் போன்றவற்றை எடுத்துள்ளார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் அவருடைய பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது. இதனால் அவருக்கு ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி கிரிகெட்டில் ஆற்றிவரும் சேவைக்கு ராணியின் பிறந்தநாள் அன்று “ஓபிஇ” விருது வழங்கப்பட உள்ளது. அவர் 16 வருட கிரிக்கெட் வாழ்வில் 225 போட்டிகளில் நாட்டுக்காக விளையாடியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.

மொயின் அலி கூற்று

கண்டிப்பாக இந்த கௌரவம் முக்கியம் என்றும், விருதை பெற்றுக்கொள்வதால் அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் கூறினார். பின்னணி, விளையாடும் முறை, கிரிக்கெட்டுக்கு வந்த விதம் ஆகிய ஏதோ ஒன்று மக்களுக்கு பிடித்திருக்கலாம் என கூறினார். எனது பங்கு என்ன, என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என மொயின் அலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here