The Legend Movie! : விரைவில் வெளியாகும் தி லெஜண்ட் திரைப்படம்! ஹீரோ யாரு தெரியுமா?

0
104

தி லெஜண்ட்

இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள தி லெஜண்ட் படம் விரைவில் வெளியாக உள்ளது.

அறிமுகம்

நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக விளம்பர படங்களில் முன்னணி நடிகைகளுடன் நடனமாடி வந்தார். தற்போது தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இரட்டை இயக்குனர்கள்

அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி பின்னர் ஷெரின் நடிப்பில் வெளியான விசில் படத்தை இயக்கினர். பின்னர் படங்கள் எதையும் இயக்காமல் இருந்த அவர்கள் தற்போது இந்த படத்தை இயக்கி உள்ளனர்.

ஊர்வசி ரவுத்தேலா

முன்னணி நடிகைகள் இதில் நடிக்க மறுத்துள்ளனர். பின்னர் கீர்த்திகா திவாரி நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவர் விலகியுள்ளார். பின் ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக இதில் நடித்துள்ளார்.

இசை

இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையினை அமைத்துள்ளார். இந்த படத்தின் மியூசிக்கல் ரைட்ஸை பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது.படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here