NIA Officers: என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனை! ஒருவர் கைது!

0
38

சோதனை

தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடியாக சோதனையினை நடத்தி வருகின்றனர். எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த பலர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.

சோதனை நடைபெறும் இடங்கள்

கேரளா, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா,பெங்களூர், லக்னோ, கோல்கட்டா, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் சோதனை நடைபெறுகிறது. இவைகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட இடஙக்ளில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.

திண்டுக்கல்

முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் மூன்றாவது மாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இன்று காலை 3.30 மணிக்கு NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இங்கு காவல்துறையினர் உட்பட 200 க்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு சோதனை செய்வதை எதிர்த்து சிலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 மணிநேரம் சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

தேனி

முத்துத் தேவன் பட்டியில் செயல்படும் அறிவகம் என்ற மதரஸாவில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாம் அமைப்பு முற்றுகையிட்டுள்ளனர்.

கோவை

இங்குள்ள கரும்புக்கடை பகுதியில் பி.எஃப்.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரான இஸ்மாயில் வீட்டில் காலை 5.30 மணி அளவில் சோதனையை தொடங்கினர். சோதனைக்கு பிறகு இஸ்மாயிலை விசாரணைக்காக அவர்களது வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள “அறிவகம் பெண்கள் மதரஸா” வில் NIA அதிகாரிகள் சோதனையினை நடத்தி வருகிறார்கள். கோரிப்பாளையம், நெல்பேட்டை சுங்க பள்ளி வாசல் போன்ற பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here