oldest person! : உலகிலேயே மிகவும் வயதான நபர் காலமானார்!

0
89

ஜப்பான்

ஜப்பானின் புகுவோகா நகரை சேர்ந்த கேன் தனகா உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமையுடன் 119 ஆவது வயதில் காலமானார். இந்த தகவலினை அரசு இன்று வெளியிட்டுள்ளது.

சாதனை

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 116ஆவது வயதில் மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பானில் இதுவரை பதிவு செய்த மிக வயதான நபராக ஆனார்.

கடை

தனகா 19 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூத்த மகனும், கணவரும் 2வது சீன-ஜப்பானிய போரில் சண்டையிட சென்றபோது, நூடுல்ஸ் கடையை நடத்தினர். இந்த போருக்கு பிறகு இந்த தம்பதியினர் அரிசி கேக் கடையை நடத்தி வந்துள்ளனர்.

உணவுகள்

சோடா மற்றும் சாக்லேட் போன்ற ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அவரது ஆயுளை நீட்டித்ததாக தனகா கூறியுள்ளார்.

வயதான நபர்கள்

இவரை அடுத்ததாக பிரெஞ்சு பெண்மணியான லூசில் ராண்டன் தற்போது உலகின் மிக வயதானவராக உள்ளார். அவரது வயது 118 ஆண்டுகள், 73 நாட்கள் ஆக உள்ளது. ஜப்பானின் மிக வயதான நபர் 115 வயதான ஃபுசா டாட்சுமி ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here