Gold Rate: தொடந்து சரிந்து வரும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

0
36

தங்கம்

பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தங்கம். தங்க ஆபரணங்கள் அணிவதை பெண்கள் விரும்புகின்றனர். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்கள் அணிகலன்கள் அணியும் போது அழகுடன் விளங்குவர். அது தங்க நகைகளாக இருக்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கும் என கருதுவர்.

இம்மாத தொடக்கம்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தொடர்ந்து சரிவை சந்தித்து கடந்த வாரங்கள் சில ஏற்றத்துடன் விற்பனையானது. அதன் பின்னர் தங்கத்தின் விலை இறக்கத்தையே சந்தித்து வந்தது. இதனால் நகை பிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இன்றைய விலை

இன்று மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 37,120 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் விலை குறைந்து வருவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here