Indian 2: விறுவிறுப்பாக தொடங்கிய “இந்தியன் 2” படப்பிடிப்பு! கதையை விளக்கிய சங்கர்!

0
24

கமல்

தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் கமல். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விக்ரம் படம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. அவர் சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 1 என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது “இந்தியன் 2” படத்தினை நடிக்க உள்ளார்.

சூட்டிங் தொடக்கம்

முதலில் இந்த படமானது லைகா ப்ரொடக்ஷனில் விறுவிறுப்பாக உருவாகிவந்தது. பின்னர் இது கைவிடப்பட்ட நிலையில், தற்போது இது படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளது. முன்னர் எடுக்கப்பட்டதில் எஞ்சிய காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது.

மேக்கப் ஆலோசனை

கமலஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றிய கலைஞரை அவர் சந்தித்துள்ளார். அவரை சந்தித்தது மட்டுமல்லாமல் அவரிடம் “இந்தியன் 2” படத்திற்கான மேக்கப் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டார்.

படப்பிடிப்பு

கமலஹாசன் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் எந்த சீனில் நடிக்க வேண்டும் என்பதை சங்கர் அவரிடம் விளக்கியுள்ளார். இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அவரை தொடர்ந்து காஜல் அகர்வால் உள்ளிட்டோர் “இந்தியன் 2” படப்பிடிப்பில் கலந்துள்ளனர்.

கோடை விருந்து

எஞ்சிய காட்சிகளை படமாக்கிய பிறகு இது அடுத்த ஆண்டு கோடை விருந்தாக திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தால் இழப்பை சந்தித்த லைகா படம் வெளிவந்து ஓடினால் இழப்பை ஈடுகட்டுமா என தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here