Crime: கேலி செய்ததால் தந்தையை கொன்ற மகன்! நடந்தது என்ன?

0
50

குடும்பம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தம்தாரி மாவட்டத்தில் தேவ்பூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு சிவநாராயன் சத்நாமி என்ற தந்தையும், இவருடைய மகன் கெலன்தாஸ் என்பவரும், மகனுடைய மனைவி சங்கீதா என்பவரும் வசித்து வந்துள்ளனர். கெலன்தாஸ் மற்றும் சங்கீதா இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கேலி

சங்கீதாவின் மாமனார் அவருடைய மகனையும், மருமகளையும் குழந்தை இல்லை என கேலி செய்து வந்துள்ளார். 20 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மருமகள் சீதாவை கேலி செய்து, அத்துமீறியுள்ளதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக சங்கீதா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

மண்வெட்டியால் தாக்குதல்

மனைவியை கேலி செய்ததை பார்த்த கெலன்தாஸ் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளியே வந்துள்ளார். கையில் வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து தந்தையை தாக்கியுள்ளார். இதனால் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கைது

இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகனை கைது செய்துள்ளனர். சத்நாமியை மருத்துவமனைக்கி அனுப்பிவைத்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here