woman! : காதலனை பார்க்க ஆற்றின் வழியே இந்தியாவிற்கு வந்த பெண்!

0
87

காட்சிகள்

காதலர்களை சந்திக்க நாடு கடந்து செல்லும் காட்சிகளை திரைப்படங்களில் காணலாம். இதனை போன்ற சம்பவங்கள் சில நிகழ்காலத்திலும் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

முடிவு

வங்கதேசத்தை சேர்ந்த 22 வயதை அடைந்த இளம்பெண் கிருஷ்ணா மண்டல். இவர் சமூக வலைத்தளம் மூலம் கொல்கத்தாவை சேர்ந்த அபிக் மண்டல் என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் நேரில் சந்திக்க முடிவினை செய்துள்ளனர்.

நீந்தி வந்த பெண்

கிருஷ்ணா மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் இந்தியா வர முடியவில்லை. காதலனை பார்க்க வேண்டும் என அவர் உறுதியாக இருந்துள்ளார். சுந்தரவனக்காட்டில் இருந்து சுமார் ஒருமணிநேரம் ஆற்றில் நீந்தி இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.

திருமணம்

பின்னர் இவர் அவரது காதலனை சந்தித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த காரணத்தினால் கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here