மாருதி சுஸுகி
இந்தியாவின் நம்பர் -1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நடப்பு ஏப்ரல் மாதம் முதல் தனது அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு
கார் மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என தெரிகிறது. இதனை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த நிறுவனம் கார்களின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி கொண்டே வருகிறது.

விலை அதிகரிப்பு
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை 8.8 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

நிறுவனங்கள்
மாருதி சுஸுகி நிறுவனம் விலையை அதிகரித்தது போல் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் நிறுவனங்கள் ஏற்கனவே அவர்களது கார்களின் விலைகளை உயர்த்தி விட்டன.

பைக் விலைகள்
டொயோட்டா நிறுவனமும் இந்தியாவில் அவர்களது கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இருசக்கர வாகன நிறுவனங்களை பொறுத்தவரையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் ஜி 310ஆர், ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக்குகளின் விலைகளை அதிகரித்துள்ளது.