Director Atlee: ட்ரெண்டான அட்லீயின் டுவிட்டர் புகைப்படம்! அட்லீயின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

0
35

அட்லீ

இவர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குனராக இருந்து வருகிறார். அட்லீ விஜய் உடன் மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார். அட்லீ பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவியாளராக இருந்தவர். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா போன்ற நடிகர்களை வைத்து இயக்கி உள்ளார்.

விஜய்யுடன் பயணம்

ராஜா ராணி படத்தை இயக்கிய பிறகு அவர் நடிகர் விஜய்யுடன் தெறி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மிகவும் பிரபலமானது. பின்னர் விஜய் உடன் இரண்டு படங்களில் பயணம் செய்தார். விஜய் உடன் மெர்சல், பிகில் என இரண்டு படங்கள் இயக்கி மிகவும் பிரபலமானார்.

ஜவான்

அட்லீ இப்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அட்லீ பிறந்தநாள் அன்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய், ஷாருக்கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

டுவீட்

அட்லீ புகைப்படத்தை வெளியிட்டு டுவீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவருடைய பிறந்தநாளில் என்ன கேட்க முடியும் என்றும் அவருடைய தூண்களுக்கு சிறந்த பிறந்தநாள் என்றும் டுவீட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here