முகாம்
திருச்சி மாவட்டம் எம்ஆர் பாளையத்தில் வனத்துறையின் யானைகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு நேற்றைய தினம் உலக வனநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட வன அலுவலர் கிரன் போன்றோர் மரக்கன்றுகளை நட்டனர்.

கலெக்டர்
விழாவினை தொடர்ந்து முகாமில் பராமரிக்கப்படும் 8 யானைகளுக்கு உணவு வழங்கி யானைகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து வனத்துறை அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார். அங்கு பராமரிக்கப்படும் யானைகளுக்கு அவர் வாழைப்பழங்களை வழங்கினார்.

மாணவிகள்
பின்னர் கலெக்டர் மாணவர்களுடன் கலந்துரையாடி வனங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசியுள்ளார். இதில் உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார், வனச்சரகர்கள் கோபிநாத், முருகேசன், தாசில்தார் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை வனத்துறை அலுவலர்களுடன் இணைந்து மாணவ மாணவிகள் அகற்றினர்.