Chennai Bypass Road! : கிடப்பில் வைக்கப்பட்டுள்ள இருசக்கரவாகன தனி வழி திட்டம்!

0
118

நெடுஞ்சாலை

பெருங்களத்தூர்- புழல் இடையிலான சென்னை பைபாஸ் சாலை 32 கிலோமீட்டர் நீளம் உடையது. சென்னை-பெங்களூர், சென்னை-திருச்சி, சென்னை-திருப்பதி, சென்னை- கொல்கத்தா போன்ற தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

வாகனங்கள்

கனரக, சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இது உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு, ஆம்னி பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள் இந்த சாலையில் அதிகளவில் செல்கின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

அதிகாரிகள் திட்டம்

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வினை காணும் வகையில் இருசக்கர வாகனங்களுக்கு தனி வழிகள் ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக திட்ட மதிப்பீட்டை தயாரித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் இந்த திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அவசியம்

இருசக்கர வாகனங்களுக்கு தனி வழியினை ஏற்படுத்தும் திட்டமானது கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஏற்படும் விபத்து, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இதனை செயல்படுத்த விரைந்து நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here