ஆட்சி
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலைநகர் ஹைதராபாத்தில் பாரத் நிடி என்ற அமைப்பு சார்பில் டிஜிட்டல் ஹிந்து மாநாடு நடைபெற்றது.

அஷ்வினி குமார் சவுபே கூற்று
நம் பாரத நாடு ஞானத்தின் உறைவிடம் என்பதை வெளிநாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியர்கள் என்பதில் நாம் பெருமை அடைய வேண்டும் என்றும், ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்றும் கூறினார். ஹிந்து என்பது புவியியல் அடையாளம் என அவர் கூறியுள்ளார்.

ஒருமைப்பாடு
இமயமலைக்கும், இந்திய பெருங்கடலுக்கும் நடுவே உள்ள நிலத்தில் வசிப்போர் அனைவரும் ஹிந்துக்கள். வடமாநிலத்தில் உள்ள மக்கள் தென் மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களில் உள்ள மக்கள் வட மாநிலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொள்வது நம்முடைய ஒருமைப்பாடை வெளிக்காட்டுகிறது.

ஜனநாயகம்
நமது நாட்டில் ஜனநாயகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வரும் ஒன்றாகும். நாட்டை தாயாக பார்ப்பது நமது பண்பு ஆகும். இதன் காரணமாக தான் நாட்டை தெய்வமாக வழிபடுவதாக அவர் கூறினார்.