Saturday, May 21, 2022
HomeTamil NewsRenault Kiger! : அப்டேட் செய்யப்பட்ட புதிய கைகர் மாடல் மாற்றங்கள்!

Renault Kiger! : அப்டேட் செய்யப்பட்ட புதிய கைகர் மாடல் மாற்றங்கள்!

அறிமுகம்

2022 ரெனால்ட் கைகர் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய 2022 ரெனால்ட் கைகர் விலை ரூபாய் 5.84 லட்சத்திலிருந்து துவங்குகிறது. இதில் வெளிப்புறம் சில அப்டேட்கள், புதிய அம்சங்கள் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.

அப்டேட்கள்

புதிய 2022 ரெனால்ட் கைகர் மாடலின் முன்புற பம்பரில் சில்வர் ஸ்கிட் பிளேட், டெயில் கேட்டில் புதிய குரோம் கார்னிஷ் செய்யப்பட்டு உள்ளது. டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களில் Turbo டீகல் வழங்கப்பட்டு உள்ளது. 16 இன்ச் அலாய் வீல்களில் சிவப்பு நிற அக்செண்ட்கள் உள்ளது.

முன்புற மாற்றங்கள்

கைகர் மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவை எந்த வேரியண்டில் வழங்கப்படும் என்பதை ரெனால்ட் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதன் அனைத்து வேரியண்ட்களிலும் PM2.5 ஏர் ஃபில்ட்டர் பொருத்தப்பட்டு உள்ளது.

எஞ்சின்

இந்த மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் போன்ற இரண்டு முறைகளில் கிடைக்கிறது. இதில் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 72 ஹெச்பி திறனையும், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 ஹெச்பி பவர், 160 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை பயன்படுத்துகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments