உர்ஃபி ஜாவேத்
பாலிவுட் நடிகை, டெலிவிசன் ஆளுமையுமான உர்ஃபி ஜாவேத் துணிச்சலான பேஷன் சென்ஸுக்கு பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிடுவார். அவரை சமந்தாவுடன் ஒப்பிட்டு சமீபத்திய இன்ஸ்டா கதையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் கதை
இவர் வெளிப்படையான ஆடையை அணிந்ததற்காக எவ்வாறு ட்ரோல் செய்யப்படுகிறார் என்பதை பகிர்ந்துள்ளார். இவர் சமந்தாவை பற்றியும் ஒரு கட்டுரையை பகிர்ந்து கொண்டார். சமந்தாவை அவர் காதலிப்பதாக கூறியுள்ளார்.

மந்திரம்
சமீபத்திய நேர்காணலில் உர்ஃபி ஜாவேத் சமூக ஊடக ட்ரோலிங்கை சமாளிக்க அவரது மந்திரத்தை பற்றி திறந்துள்ளார். என்னை பிடிக்காதவர்களுக்கு பதில் சொல்வது எனக்கு அவசியமில்லை என கூறியுள்ளார். மக்கள் தங்கள் சொந்த குழந்தைகளை கூட விரும்பாத நிலையில் என்னை எப்படி விரும்புவார்கள் என்றும், எல்லோரும் என்னை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

சாகுந்தலம்
சமந்தா அவரது படமான சாகுந்தலம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தவிர சமந்தாவின் யசோதா என்ற தமிழ்- தெலுங்கு இருமொழி திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார்.