விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி முன்னணி நடிகராக இருப்பதுடன் முக்கிய நடிகர்களின் படத்தில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்சேதுபதி அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இயக்குனர்
தற்போது சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள மணிகண்டன் அவருடைய அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, விக்ரம் ஆகியோரை நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்கள்
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்குனர் மணிகண்டன் அவர்கள் இயக்கியுள்ளார். இவருடைய இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.