Villagers shock! : இளைஞர் செய்த செயலால் அதிர்ந்து போன கிராம மக்கள்!

0
68

அதிர்ச்சி

காதலியை இருட்டில் சந்திக்க இளைஞர் செய்த செயலால் ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சி அடைந்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். தனிநபர் ஒருவரது நடவடிக்கையால் பொதுமக்கள் மின்வெட்டை சந்திப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

மின் விநியோகம் துண்டிப்பு

பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரது காதலியை இருட்டில் சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்திற்கும் மின் விநியோகத்தை துண்டித்துள்ளார். இந்த நிகழ்வு ஒருமுறை மட்டும் நிகழவில்லை. அவரது காதலியை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் மின்சாரம் துண்டிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் கிராம மக்களிடம் சிக்கி கொண்டுள்ளார்.

பொதுமக்கள்

பீகார் மாநிலத்தின் கணேஷ்பூர் கிராமத்தில் காரணமே இன்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு குறித்த உண்மையான காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாள் இரவிலும் 3 மணி நேரம் கிராமம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ரகசிய நோட்டம்

கிராமத்திற்கு மின் விநியோகத்தை துண்டிப்பது யார் என்பதை அறிய கிராம மக்கள் குழுக்கள் அமைத்து ரகசியமாக நோட்டமிட்டனர். அதே கிராமத்தை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் ஒருவர் வாடிக்கையாக மின் விநியோகத்தை துண்டித்து விட்டு பள்ளியில் அவரது காதலியை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆலோசனை

மின் விநியோகத்தை துண்டித்த இளைஞரை பிடித்து கிராம மக்கள் மொட்டை அடித்துவிட்டனர். அவரை கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதனை குறித்து கிராம பஞ்சாயத்து குழுவினர் கூடி ஆலோசனை செய்தனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here