Friday, May 20, 2022
HomeTamil NewsViral Tamil News 2022: நீண்ட வருடமாகியும் பாசத்தை மறக்கவில்லை யானைகளின் சூப்பர் ஸ்டார் தன்...

Viral Tamil News 2022: நீண்ட வருடமாகியும் பாசத்தை மறக்கவில்லை யானைகளின் சூப்பர் ஸ்டார் தன் வளர்ப்பு தாயுடன் செலவிட்ட தருணம்

தெச்சிக்கோட்டு காவு ராமசந்திரன்

கேராளாவின் புகழ் பெற்ற யானை தெச்சிக்கோட்டு காவு ராமசந்திரன் தன்னை மகன் போல வளர்த்த நாராயணியம்மாவை நீண்ட வருடம் கழித்து சந்தித்தது. கேரளா யானைகளில் மிகவும் உயரமான கம்பிரமான யானை எனக் கூறப்படும் யானை தெச்சிக்கோட்டு காவு ராமசந்திரன்.

மூடி சுட மன்னன்

அதிக அளவில் கோவில் விழாக்களில் பங்கு பெற்ற யானை கேரளா யானைகளின் மூடி சுட மன்னன் என பல பெயர்கள் மட்டும் இன்றி யானைகளின் சூப்பர் ஸ்டார் என்ற பட்ட பெயரும் ராமச்சந்திரனுக்கு உள்ளது.

தெச்சிக்கோட்டு காவு கோவில்

சமுக வலைத்தளங்களில் உள்ள யானை பிரியர்களின் அதிகமான ரசிகர்கள் ராமச்சந்திரனுக்கு உள்ளன. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தெச்சிக்கோட்டு காவு என்ற கோவிலில் வளர்க்கப்பட்டதால், யானை ராமச்சந்திரனின் பெயரை கோவில் பெயருடன் சேர்த்து மக்கள் அழைக்க தொடங்கினர்.

நாராயணியம்மா

அப்போது அதே கோவிலில் பணி பெண்ணாக வேலை செய்து வந்தவர் நாராயணியம்மா. ராமச்சந்திரனுக்கு உணவளிப்பது அதை பராமரிப்பது போன்ற பணிகளை நாராயணியம்மா செய்து வந்தார்.

பாசம்

காலப்போக்கில் இருவருக்கும் அம்மா மகன் என்ற பாசம் ஏற்பட்டுள்ளது. 2013 க்கு பிறகு கோவில் பணிகளில் இருந்து விலகி கொண்ட நாராயணியம்மா. தனது முதுமை காலத்தை திருச்சூரில் உள்ள தனது வீட்டில் கழித்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனது வளர்ப்பு மகனான தெச்சிக்கோட்டு காவு ராமச்சந்திரனை பார்க்க வேண்டும் என வீட்டாரிடம் நாராயணியம்மா கேட்டுள்ளார்.

வளர்ப்பு அம்மாவை பார்க்க வந்த ராமசந்திரன்

அவர் கேட்டு கொண்ட படியே ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனது 84 வயது அம்மாவை காண யானைகளின் சூப்பர் ஸ்டார்ரானா ராமசந்திரன் வந்துள்ளார். தன்னை காண வந்த ராமச்சந்திரனுக்கு நாராயணியம்மா துதிக்கையை தடவி கொடுத்து உணவளித்தார்.

பாச போராட்டம்

பிரிய மனமில்லாமல் இருவரும் நடத்திய பாச போராட்டத்தை பார்த்த பகுதி மக்கள் கண்கலங்கினர். தற்போது தெச்சிக்கோட்டு காவு ராமசந்திரன் தன் வளர்ப்பு தாயை காண வந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments