நீரில் தத்தளித்த மான் குட்டி
வீடியோவில் ஆற்றில் தவித்து கொண்டிருந்த மான் குட்டியை காப்பாற்றிக் கொண்டு நாய் ஒன்று வருகிறது. வாயில் மான் குட்டியினை கவ்வி பிடித்தவாறு நீரில் நீந்தி வரும் நாயின் உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குரங்கு
இதனை போல குரங்கு ஒன்று பூனை குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. வீடியோவில் குப்பை தொட்டியில் பூனை குட்டி ஒன்று விழுந்து உள்ளே சிக்கி தவித்துக் கொண்டு உள்ளது. பூனை குட்டியின்சத்தம் கேட்டு குரங்கு எட்டி பார்க்க உள்ளே பூனைக்குட்டி கிடந்துள்ளது. பூனைக் குட்டியை காப்பாற்ற குரங்கு குப்பை தொட்டிக்குள் இறங்கி காப்பாற்ற முயற்சி செய்கிறது.
பூனை குட்டி
பூனை குட்டியை காப்பாற்ற முடியாது என குரங்கு குப்பை தொட்டியில் இருந்து வெளியில் வந்தது. பின் பூனை குட்டியை காப்பாற்ற சிறுமி ஒருவரிடம் உதவி கேட்டது . குரங்கின் மொழியை தெரிந்து கொண்ட சிறுமி குப்பை தொட்டியில் இறங்கி பூனை குட்டியை காப்பாற்றி குரங்கின் கையில் கொடுத்தார்.