Rajat Patidar! : ஆர்சிபி அணியின் ரஜத் படிதாரை பாராட்டிய விராட் கோலி!

0
99

ரஜத் படிதார்

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியானது 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை தோற்கடித்து குவாலிபையர் 2 க்கு முன்னேற்றம் பெற்றுள்ளது. ஆர்சிபி அணியில் 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த ரஜத் படிதார் ஆட்ட நாயகன் என்ற விருதினை பெற்றுள்ளார்.

விராட் கோலி கூற்று

ரஜத் விளையாடியதை போன்ற ஆட்டத்தை மிகவும் குறைவாக பார்த்துள்ளதாக கூறியுள்ளார். பெரிய போட்டி, ஆட்டத்தின் அழுத்தம், அன்கேப்ட் பிளேயர் இது போன்று ஆடுவதை இப்போதுதான் பார்க்கிறேன் என கூறினார்.

போட்டி

இது எவ்வளவு முக்கியமான போட்டி என்றும், அவர் செய்தது மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார். இதனை யாரும் குறைவாக மதிப்பிட முடியாது என்று பாராட்டியுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக அவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்ட வேண்டும் என கூறியுள்ளார் விராட் கோலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here