Virat Kohli! : விராட் கோலியின் விரக்தியான பதில்! ஏற்றம், இறக்கத்தை சந்தித்த கோலி..!

0
111

விராட் கோலி

இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை செய்தவர். சமீப காலமாக அவருடைய விளையாட்டில் கவனம் இல்லாமல் சொதப்பி வருகிறார். இவர் கடைசியாக சதம் அடித்தே 2 ஆண்டுகள் ஆகிறது.

அவுட்

தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார் விராட் கோலி. இவர் 3 போட்டிகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக்-கில் அவுட்டாகியுள்ளார். இவர் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து டக் அவுட் ஆனார். அவரது ஐபிஎல் வாழ்க்கையில் முதல்முறையாக கோலி இவ்வாறு தோல்வியை சந்தித்துள்ளார்.

பேட்டி

சமீபத்தில் விராட் கோலியிடம் ஒரு பேட்டி நடைபெற்றது. அதில், உங்களுக்கு சமீபத்தில் 2 டக்குகள் கிடைத்ததே என கோலி அவுட் ஆனதை கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் செய்தியாளர்.

பதில்

இதற்கு சிரித்தபடி பதிலளித்த கோலி நான் 2 முறை முதல் பந்தில் டக் அவுட் ஆனேன் என்றும், இரண்டாவது முறை அவுட் ஆன பிறகு உதவியில்லாமல் கைவிடப்பட்டது போல தவித்தேன் என கூறினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்று நடந்ததே இல்லை என கூறியுள்ளார்.

ஏற்றம், இறக்கம்

விராட் கோலி இப்போது அனைத்தையும் பார்த்துவிட்டதாக கூறியுள்ளார். நீண்ட நாட்களாக விளையாடி வரும் நான், இந்த விளையாட்டில் ஏற்றம், இறக்கம் என அனைத்தையும் பார்த்துவிட்டதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here