கேஜிஎஃப்2 படத்தின்  எடிட்டருக்கு  19 வயதா!

'கேஜிஎஃப் 2' படத்தை எடிட்டராக பணிபுரிந்தவர் 19 வயதே ஆன உஜ்வால் குல்கர்னி.

'கேஜிஎஃப் 2' படத்தின் எதிர்பார்பார்ப்பையும், படத்தின் வேகத்தையும் ரசிகரிடம் குல்கர்னியின் படத்தொகுப்பு கடத்தியிருக்கும்.

படத்தில் நாயகியை கடத்திச் செல்லும் காட்சிகளில் படத்தொகுப்பில் உஜ்வால் மிரட்டியிருப்பார்.

இந்த வகையான எடிட்டிங் ஃபாஸ்ட் கட் எடிட்டிங் பாணியை ஹாலிவுட் படங்களில் மட்டுமே காண முடியும்.

மிகப் பெரிய படத்தில் 19 வயதே ஆன ஒருவர் எடிட்டராக வந்து சேர்ந்தது ஆச்சரியமான ஒரு நிகழ்வுதான்.

அவரை நேரில் அழைத்து 'கேஜிஎஃப் 2' படத்தில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பல புதிய படங்களுக்கான வாய்ப்புகள் அவரை தேடி வந்துள்ளன.