+2 மாணவி  பள்ளி கழிவறையில் சடலமாக மீட்பு! உடலை வாங்கமறுத்த பெற்றோர்கள்!

தூத்துக்குடியில்  இயங்கி வரும்  தனியார்  மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரத்தை சேர்ந்த  மாணவி  படித்து வந்தார்.  

நேற்றையதினம்  இரவு பள்ளி கழிவறையில்  மாணவி தூக்கிட்ட  நிலையில்  சடலமாக  கிடந்துள்ளார்.

சடலத்தை பார்த்த  சக மாணவிகள்  பள்ளி நிர்வாகத்திற்கு  உடனடியாக தகவலினை அளித்துள்ளனர்.

நிர்வாகம் உடனடியாக  போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர்.

போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி  உடற்கூறாய்வுக்காக  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர்.