இறக்குமதி செய்த  காருக்கு, அபராதம் விதித்ததனை  எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு போட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை  நடவடிக்கை எடுக்கக் கூடாது என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தனது சொந்த தேவைக்காக  அமெரிக்காவில் இருந்து பி.எம்.டபிள்யூ.,கார்  2005 செப்டம்பரில் இறக்குமதிசெய்துள்ளேன்.

காரை  பதிவு செய்ய  போக்குவரத்து அலுவலகத்தில்  சென்ற போது  வரி செலுத்தும்படி கூறினர்.  

இந்த காரை 2009ல் விற்று விட்டேன். 2019 ல் இந்த வழக்கு தள்ளுபடியானது.

அதன் பின் அபராதம் அளிக்குமாறு வணிக வரி துறை உத்தரவிட்டது.

2021ல் அனுப்பிய நோட்டீஸில் வரி கட்டவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதியிருந்தது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்த  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும்  வரி செலுத்த உத்தரவிடவில்லை.

வரி 7.98 லட்சம்  செலுத்தி உள்ளேன்.  

வணிக வரித் துறை நடவடிக்கை விதிக்க தடை போட வேண்டும். 

வரியை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளன.