ஒரு விபத்தில்  குடும்பத்தை இழந்த நடிகை  லட்சுமி மேனன்.

அவருடைய அக்கா மகளுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.

ஒரு நபரை  காதலித்து வரும் நடிகை , அவருடைய காதலனுக்கு  ஏற்பட்ட  காயத்தால்  மருத்துவமனைக்கு கொண்டு  செல்கிறார்.

 சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையில் இருந்து அவரது காதலன் காணாமல் போகிறார்.

பதற்றம் அடைந்த  லட்சுமி மேனன்  மருத்துவமனையில் விசாரித்தார்.

மருத்துவமனையில் உள்ளவர்கள் அப்படி ஒன்றும்  நடைபெறவில்லை என  கூறுகின்றனர்.

கடைசியில்  லட்சுமி மேனன்,  தன் காதலனை கண்டுபிடிப்பாரா? இல்லையா? அவரது காதலனுக்கு  என்ன ஆனது? என்பது தான் இந்த  படத்தின் கதை.

கதாநாயகியாக  நடித்திருக்கும் லட்சுமி மேனன், ஸ்கிசோபெரினியா என்ற  மனநோயால் பாத்திக்கப்பட்ட நடிப்பில்  சிறப்பாக நடித்திருக்கிறார். 

இவரது  எதார்த்தமனா  நடிப்பே படத்தின் பலமாக இருக்கிறது. 

இவருடன் இணைந்து   ஆர்.வி.பரதன் நடித்துள்ளார். 

அவருக்கு  முதல் படமாக இருந்தாலும்   அவர் நடிப்பில் கவனம் செலுத்தி உள்ளார்.

இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை  ஆகியவை பலம்.