பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவில் தீயில் இறங்கிய IAS அதிகாரி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
அந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத குண்டம் திருவிழா மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கமாகும்.
இரண்டு ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்றது.
புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலின் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
பண்ணாரியம்மன் சபரத்தில் வைக்கப்பட்டு திருவீதி உலா வந்து அருள்பாலிக்கப்பட்டது.
பூசாரி முதலில் குண்டத்திற்கு பூஜைகள் செய்த பிறகு குண்டத்தில் இறங்கினார்.
அமுதா ஐஏஎஸ் இந்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு அவர் திடீரென குண்டத்தில் இறங்கிய சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.