திருடிய பணத்தை பங்கு போடா  ஏற்பட்ட சண்டையில் , திருப்பூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது.

இதன்  தொடர்பாக நண்பர்கள் 3 பேரை  கைது செய்தனர்.  

மதுரை மாவட்டத்தில் உள்ள  சமயநல்லூரை அடுத்த தேனூர் பெரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரணவன் வயது 27.

திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி ஆட்டோ ஒட்டி  வந்தார். 

இதனிடையில்  திருப்பூர் மேட்டுப்பாளையம், அரசமரம் பகுதியில் சடலமாக கிடந்தார்.

தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று,  பிரேத பரிசோதனைக்காக  அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார் சரவணன் கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.  

சரவணனை அவரது நண்பர்கள் நன்னுபிரசாத்  சித்திக் பாஷா, மனோஜ் ஆகிய 3 பேர் சேர்ந்து  கொலை செய்தது தெரியவந்துள்ளது.

புதிய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இருந்த நபரிடம்  இருந்து,  பணத்தை திருடியுள்ளனர்.

கோவமடைந்த  3 பேரும்  சரவணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மூன்று பேரையும்  போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.