பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது! விஜய்க்கு  இரண்டு பெயர்  என இயக்குனர் தகவல்!

நடிகர்  விஜய்யின்  65 ஆவது  படத்தினை நெல்சன் இயக்கி உள்ளார்.

பீஸ்ட்  என பெயரிடப்பட்டுள்ள  இந்த படம்  ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த  படமாக  தயாராகி  உள்ளது.

 இதில்  பூஜா ஹெக்டே ஹீரோயினாக, பலர்  முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

பீஸ்ட்  திரைப்படம்  வருகிற  ஏப்ரல் 13 ஆம்  தேதி  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்  ஆகிய  5 மொழிகளில்  ரிலீசாக  உள்ளன.

இந்த படத்திற்கு  அனிருத்  இசையினை அமைக்க, மனோஜ்  பரமஹம்சா  ஒளிப்பதிவினை  செய்துள்ளார்.

பீஸ்ட்  படத்தின் டிரைலர்  தற்போது  வெளியாகி உள்ளது.  

பீஸ்ட் படத்தில்  விஜய்  வீர ராகவன்  என்ற பெயரில்  நடித்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.