பாலிவுட் நடிகருக்கு கொலை மிரட்டல்! கடிதம் எழுதி வைத்த மர்ம நபர்கள்!

மும்பை பாந்த்ராவில்  சல்மான் கான், அவரது குடும்பத்துடன்  வசித்து வருகிறார்.  

சல்மான் கானின்  தந்தை  சலீம் கான்  வழக்கமாக  கடற்கரையில்  நடைபயிற்சி செய்வார்.

இவரது  பாதுகாப்பிற்காக  இரண்டு  காவலர்கள் அவருடன் செல்வர்.

 சலீம் கான் நடைப்பயிற்சி மேற்கொண்ட  பிறகு அங்குள்ள  ஓர்  இருக்கையில்  அமர்ந்துள்ளார்.

அதில் ஒரு கடிதம்  இருந்துள்ளது.

அந்த கடிதத்தில்  பாடகர் சித்து மூஸேவாலா  நிலைதான்  உங்களுக்கும்  என எழுதிவைக்க பட்டுள்ளது.