துபாயில்  எக்ஸ்போ கண்காட்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த   முதல்வர் ஸ்டாலின்!

தொழில்  முதலீடுகளை  ஈர்க்கும்  விதமாக  4 நாட்கள்  பயணமாக   முதல்வர் ஸ்டாலின்  துபாய் சென்றுள்ளார்.  

துபாய் எக்ஸ்போ  கண்காட்சி நிகழ்ச்சியில்  பங்கேற்று  தமிழ்நாடு  அரங்கை  திறந்து  வைத்தார்.

 தமிழகத்தின்  சிறப்பை  எடுத்துக்காட்டும் வகையில்  தொடர்ச்சியாக  காட்சி படங்கள்  போடப்படுகின்றன.

தமிழ்நாட்டின்  பெருமைகளை உலகிற்கு கூறும் வகையில்  அரங்கு  அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களை  சந்தித்து   தமிழகத்தில் முதலீடுகள்  மேற்கொள்வது  குறித்து  ஆலோசனை  மேற்கொண்டுள்ளார்.

இசைப்புயல்  ஏஆர் ரஹ்மான்  ஸ்டூடியோவுக்கு முதல்வர்  ஸ்டாலின்  குடும்பத்தினருடன்  சென்றுள்ளார்.  

 அங்கு  அவர் தயாரித்துள்ள  "மூப்பில்லா  தமிழே  தாயே"  என்ற ஆல்பத்தை  முதல்வருக்கு  காண்பித்தார்.  

காட்சி படங்கள்  ஒளிபரப்பப்பட்டதை  ஸ்டாலின்  பார்வையிட்டார்.