குற்றச்செயல்களை தடுக்கவும் அல்லது  குற்றம் நடந்தால் அதில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் 'சிசி டிவி' கேமராக்கள் பயன்படுகிறது.

நிறுவனங்கள், சாலை சந்திப்புகள், பொதுமக்கள்  செல்லும் இடங்களில்  'சிசி டிவி' கேமரா பொருத்துவதற்கு அரசு உத்தரவு இட்டது.

'சிசி டிவி' கேமரா பொருத்தும் பணியை செய்யுமாறு  கடைக்காரர்களிடம்  போலீசார் கூறி வருகின்றனர்.

கடை மற்றும்  வணிக நிறுவனம் போன்ற இடங்களில்  கேமரா உள்ளதா என பார்த்து  அறிக்கை அளிக்க  கமிஷனர்  உத்தரவிட்டுள்ளார்.

கடை கடையாக போலீசார்  ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் 'சிசி டிவி' கேமரா பொருத்தும் பணி விரைந்து நடக்கும்  குற்றவாளிகளை பிடிப்பது  எளிதாகும் என, போலீசார் நம்புகின்றனர்.