கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு!  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்!

சென்னை  தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி  செய்தியாளர்களிடம்  பேசியுள்ளார்.  

இரண்டாம், மூன்றாம் ஆண்டு பொறியியல்  மாணவர்களுக்கு ஜூலை  18 ஆம் தேதி  வகுப்புகள்  தொடங்கப்படும்  என அவர் கூறியுள்ளார்.  

சிபிஎஸ்இ  தேர்வு  முடிவுகள்  வெளியான பிறகு பொறியியல்  முதலாமாண்டு  வகுப்புகள்  தொடங்கும்  என கூறியுள்ளார்.  

மாவட்டங்கள்  தோறும்  கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு  கடந்த ஆண்டை விட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்  என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

பொறியியல்  படிப்புகளில்   சேர   85, 902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்  என அமைச்சர்  கூறியுள்ளார்.