கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு  கொரோனா தொற்று  பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள  சோனியா காந்தி  வீட்டில்  அவரை  தனிமைப்படுத்தி  உள்ளார்.

பண மோசடி  குறித்த  வழக்கில்  வருகிற  8 ஆம் தேதி  நேரில்  ஆஜராகுமாறு    சம்மன் ஒன்றை  அமலாக்கத்துறை அனுப்பி இருந்தது.

அவரது மகள்  பிரியங்கா காந்தி  பயணத்தை  ரத்து  செய்துவிட்டு  டில்லி  திரும்புவதாக  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.  

 சோனியா காந்தி  இரண்டு  தவணை  தடுப்பூசி  செலுத்தி கொண்ட நிலையில் தொற்று  உறுதி  செய்யப்பட்டுள்ளது.