ராகு, கேது பெயர்ச்சி விழாவில் திரண்டு வந்த பக்தர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
புராண காலத்தில் சுசீல முனிவரின் குழந்தையை பாம்பாகிய ராகு தீண்டியது.
திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமியை மகாசிவராத்திரி அன்று வழிபட்டதால் சாபம் நீங்கியது.
ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள்பாலிக்கிறார்.
ராகு பகவானுக்கும், நாகவள்ளி, நாககன்னிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு 23 முதல் 26 ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
பல ஆயிரம் பக்தர்கள் நேற்றைய தினம் தரிசனம் செய்ய குவிந்ததால் திருநாகேஸ்வரம் பக்தர்களால் நிரம்பியது.