தமிழ் சினிமாவில் பிரபல  நடிகராக வளர்ந்து  வரும் நடிகர் "விஜய் சேதுபதி" .

இவர்  "மிஷ்கின்" இயக்கும் படத்தில் ஹீரோவாகநடிக்கிறார் என்ற  தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர்  மிஷ்கின் "நந்தலாலா", "பிசாசு", "அஞ்சாதே" "துப்பறிவாளன்" ஆகிய பல படங்களை இயக்கியுள்ளார். 

தற்போது இவருக்கும் நடிகர்  விஷாலுக்கும்  நடந்த பிரச்சனையால்  "துப்பறிவாளன் 2" படத்தில் இருந்து விஷாலை நீக்கினார். 

பின்  இவர் "பிசாசு 2" என்ற திரைப்படத்தை தற்போது இயக்கிவருகிறார்.

"பிசாசு 2" என்ற  படத்தில் ஆண்ட்ரியா நடிகையாக  நடித்திருக்கிறார். 

இந்த படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்து  திரைக்கு வர காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு "கார்த்திக் ராஜா" இசையை அமைத்திருக்கிறார்.  

விஜய் சேதுபதி பிசாசு 2 படத்தில் சின்ன  கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில்  விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் படம்  இயக்க முடிவுஎடுத்ததாக  தகவல் வெளியாகியுள்ளது.  

படத்தை  பற்றிய  அறிவிப்புகள் வெளியாகும் என்று  வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றனர்.