அமெரிக்காவில் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் படி விஷ ஊசி போட்டு மரண தண்டனை அளிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த டெனால்டு கிரான்ட் 25 வயதான இளைஞர்.
இவரது காதலி வழக்கில் சிக்கி சிறையில் போடப்பட்டார்.
காதலியை ஜாமினில் எடுக்க பணம் இல்லாததால் 2001 ல் திருட முயன்றுள்ளார்.
அதில் ஏற்பட்டுள்ள சண்டையில் இரண்டு பேரை கொலை செய்துள்ளார்.
அதனால் இவர் கைது செய்யப்பட்டு இவருக்கு 2005 ல் மரண தண்டனை அளிக்கப்பட்டது.
இவரின் தண்டனையை குறைக்க மனுக்கள் தாக்கல் செய்தும் அது தள்ளுபடியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து டெனால்டு கிரான்ட்டிற்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை அளித்ததாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இதனால் மரண தண்டனை நிறைவேற்ற பட்டுள்ளது.