ஆப்கானிஸ்தானில்  ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின்  ஃபைசபாத்தில்  காலையில்  நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக  தேசிய நில அதிர்வு  மையம்  தெரிவித்துள்ளது.  

இது ரிக்டர் அளவுகோலில்  4.1 6.2  என பதிவானதாக  கூறப்படுகிறது.

நாட்டின்  நிலவரப்படி  திங்கள்கிழமை 1.04 மணிக்கு  நிலநடுக்கம்  ஏற்பட்டதாக  தேசிய நில அதிர்வு மையம்  தெரிவித்துள்ளது.

ஃபைசாபாத்  நகரின் கிழக்கே  235 கிலோமீட்டர்  தொலைவில், 166 கிலோமீட்டர்  ஆழத்திலும்  நிலநடுக்கம்  ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.  

இதனால்  ஏற்பட்ட உயிர்சேதம் குறித்து  இதுவரை வெளியாகவில்லை.