கொரோனா பரவல் காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட  ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளது.

ஜுனியர் என்டிஆர் மற்றும்  ராம் சரண், ஆலியா பட் ஆகியோர்  நடிப்பில் உருவான  படம் "ஆர்ஆர்ஆர்". 

பாகுபலி படத்தின்  பிறகு  ராஜமௌலி இயக்கும் படம் என்பதனால்  இந்தப் படத்திற்கு  எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிவடைந்த  நிலையில் ஜனவரி 7 திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டன. 

அதை  தொடர்ந்து படத்திற்கான விளம்பர வேலைகளில்  தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

கொரோனா  தொற்று  அதிகரிக்கத் தொடங்கியதால் "ஆர்ஆர்ஆர்" படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

"ஆர்ஆர்ஆர்" படத்தின் வெளியீடு  அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.

அதன்படி மார்ச் 16 அல்லது ஏப்ரல் 21 படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன .