சென்னையில் உள்ள  ஓட்டேரி பகுதியில்  ஒன்பதாவது தெருவில் உள்ளவர்  பிரதீப்.

இவருக்கு  20வருடங்களுக்கு முன் பிரீத்தா என்ற பெண்ணுடன்  திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு  20 வயது ஆன  கீர்த்தி என்ற மகளும், 10 வயது ஆன  கவுதம் என்ற மகனும் உள்ளன. 

கீர்த்திக்கு திருமணம் பண்ணிவைப்பதற்கான  பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இவரது தந்தை குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாக  வீட்டில்  தினமும் சண்டை  வந்துள்ளது. 

இதன் இடையில்  நேற்று  குடித்துவிட்டு  போதையில் வீட்டிற்குள் வந்ததந்தை  தனது மகள் என்று  கூட  பார்க்காமல்   தவறான முறையில் நடக்க முயன்றிருக்கிறார்.

பின்  மகள்  சத்தம் போட்டதை தொடர்ந்து   பிரீத்தா மகளை  கணவரிடம் இருந்து காப்பாத்த  போராடியுள்ளார்.

முரட்டுத்தனமாக  நடந்து கொண்ட கணவரை  ஆத்திரத்தில் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து  தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார்.  

அருகில் உள்ளோர்  கொலை  குறித்து  காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.   

கொலை  குறித்து பாதிக்கப்பட்ட கீர்த்தி மற்றும் அவருடைய மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில்  மகளைக் காப்பாற்ற தற்காப்புக்காக கொலை செய்ததால்  விடுதலை செய்ய காவல்துறையினர் முடிவு எடுத்துள்ளன.