பெண் போலீஸ் இளைஞரை கன்னத்தில் அறைந்து விட்டு செல்லும் ஆறு விநாடி வீடியோ  வெளியாகி இருக்கிறது

பேன்ட்டை  சுத்தம் செய்யச் சொல்லி இளைஞரின் கன்னத்தில் அறைந்த பெண் போலீசின்  வீடியோ  வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில்  நடந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்  காவல் துறையினர்  சில அடக்குமுறைகாவலர்களும் இருக்கிறார்கள்.  

அதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாகும்.  சமூகவலைதளத்தில்  அத்துமீறல்களும் பதிவாகி,  பார்வைக்கும் வந்துவிடுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் உள்ள சிர்மோர் சவுக் பகுதியில் இது நடந்திருப்பது  தெரிய வந்திருக்கிறது.  

இளைஞர் தனது பைக்கை எடுக்க முயற்சித்து இருக்கிறார்.

பைக்கில் உள்ள  சக்கரங்கள் சுழன்று  சாலையில் இருந்த சகதி பெண் காவலர் மீது பட்டிருக்கிறது.

கோவமடைந்த  பெண் காவலர்,  பேண்டை சுத்தம் செய்யுமாறு பணித்திருக்கிறார்.

பெண் காவலர்  கோபம் தீராமல்  இளைஞரின் கன்னத்தில் அறைந்துவிட்டுச் சென்றது பதிவாகியிருக்கிறது.

இது  வைரலானதைத் தொடர்ந்து  பெண் காவலருக்குச் சமூகவலைதளங்களில்  கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

“இதுதொடர்பாக  புகார் அளித்தால் விசாரணை நடத்துவோம்” என்று ரேவா காவல் துறைக்  கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார்.