அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்தின் முதல் பார்வை!
ஒரு பழமையான குடும்பத்தின் பின்னணி கொண்ட இளம் பெண் அக்சரா ஹாசன்.
அவருக்கென்று விருப்பம் எதுவும் இல்லாமல் அவருடைய தாய் சொல்வதை கேட்டு நடக்கிறார்.
அக்சரா திருமணத்திற்கு முன் அவரது காதலனுடன் உறவு வைத்துக்கொள்ள ஆசை படுகிறார்.
பாலுறவு குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்ட அவரது தோழிகளிடம் ஆலசோனை கேட்கிறார்.
பவித்ரா என்கிற பாத்திரத்தில் அக்சரா ஹாசன் நடிக்கிறார்.
தோழிகளாக நடித்த அஞ்சனாவும் ஜெசிகாவும் இதில் அதிகம் காணப்படுகிறார்கள்.
தோழிகள் மூவருக்கும் இடையேயான உரையாடல்கள் திரைப்படத்தில் மிகவும் அழுத்தமானவை.
இந்த படத்தினை இயக்கியிருப்பது ராஜா ராமமூர்த்தி.
அக்சரா ஏன் எப்போதும் பச்சை நிற உடையில் இருக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.