மீண்டும் அதிகரித்த   தங்கம்  விலை!

தங்கம் விலை  கடந்த  சில நாட்களாகவே  உயர்ந்து கொண்டே வருகிறது.  

கடந்த மாதம்  24 ஆம் தேதி  உக்ரைன்- ரஷ்யா  இடையே போர் தொடங்கியது.

போர்  காரணமாக  தங்கம்   விலை  குறைவதும்,  உயர்வதுமாக  இருந்து  வருகிறது.

ஆபரண தங்கத்தின்  விலை  சவரனுக்கு  ரூபாய் 280 உயர்ந்து  ஒரு சவரன் 38,624 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் 4,828  ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் போன்றே   வெள்ளி விலையும் உயர்ந்து  வருகிறது.

வெள்ளியானது  கிலோவுக்கு   800 ரூபாய்  அதிகரித்து   உள்ளது.  

ஒரு கிராம்  வெள்ளி ரூபாய்  73.40க்கு  விற்பனையானது.