சென்னையில் உள்ள  வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.

வரும் 24ம் தேதி  அரசின் கொரோனா  வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக கோவிலுக்குள் பல்வேறு பணிகள் நடந்துள்ளன.

அவற்றில், தேவர் மண்டபத்து துாண்களில் முருகப்பெருமானின் பல்வேறு பெயர்களும் கற்சித்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளன. 

அவரது வரலாற்றைச் சொல்லும் கந்த புராணத்தை படித்தால், அந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கங்கை நதிக்கு ஒப்பான சரவணப் பொய்கையில் வளர்ந்தவராதலால், காங்கேய மூர்த்தி.

சூரபத்மன் வம்சத்தில் வந்த தாரகாரன் என்ற அரக்கனை வதம் செய்தவர் என்பதால், தாரகாரமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த சிற்பங்களின் அழகில் தங்கள் மனதை பறிகொடுக்கப் போவது நிச்சயம்.