பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த முக்கிய உத்தரவு!

நாட்டில்   வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக  காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு  எதிர்க்கட்சிகள்  குற்றம் சாட்டி  வருகின்றன.

பல அரசு துறைகளில்  ஏராளாமான  பணி இடங்கள்  காலியாக  உள்ளதாக  அதிகாரிகள்  தெரிவித்தனர்.

சமீபத்தில்  பல துறைகளில்  உள்ள மனித வளம்  குறித்து  பிரதமர் உயர் மட்ட  குழுவினருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.  

இதனை தொடர்ந்து  பிரதமர் அலுவலகம்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தது.

10 லட்சம் பேரை   உடனடியாக  பணியில் அமர்த்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என   பிரதமர்  உத்தரவினை  போட்டுள்ளார். 

இவ்வாறு  பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.