பாட்மின்டன் போட்டியில் இந்தியா சாதனை!  அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

  பாட்மின்டன் இந்திய ஆடவர் அணி  அரையிறுதி சுற்றுக்கு  முன்னேறி  பதக்கத்தை  உறுதி செய்தது.

 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு  இந்தியா பதக்கம் வெல்ல இருப்பது  இதுவே  முதல் முறையாகும்.

இதற்கு முன்பாக  இந்தியா  இன்டர் ஸோனல் ஃபைனல்ஸில் 3 வெண்கலங்களை வென்றிருந்தது.

நிறைவடைந்த காலிறுதிச்சுற்றில்  இந்தியா 3-2 என்ற கணக்கில் மலேசியாவை  வீழ்த்தியது.

அரையிறுதிச்சுற்று போட்டியில்   டென்மார்க்கை  எதிர்கொள்கிறது இந்தியா.