நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்!

 ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில்  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  கலந்துகொண்டார்.

அதில் பல நலத்திட்ட  உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

  200 விவசாயிகளுக்கு  விதைகள், மரக்கன்றுகள், மருந்து தெளிப்பான்  போன்ற   உதவிகளை  அமைச்சர்  வழங்கினார்.

85 ஊராட்சிகளில் 1,002 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில்  68 குழுக்கள்  உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்  அனைவருக்கும்  ஆழ்குழாய் கிணறு  வசதி ஏற்படுத்துதல்,  விதைகள்  வழங்குதல்   போன்றவை  செயல்பட   உள்ளதாக  கூறினார்.