தாய் பசு ஓன்று தனது கன்றுகுட்டிக்காக காரின் பின்னே 2 கிலோ மீட்டர் ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்த பசு சில நாட்களுக்கு முன் ஒரு கன்றை ஈன்றது.
வேறு இடத்தில் இருந்த கன்றையும் பசுவையும் விவசாயி தனது தொழுவத்திற்கு அழைத்து செல்ல நினைத்தார்.
பிறந்து இரண்டு நாட்களே ஆன பசுவால் நடக்க முடியவில்லை.
இதனால் ஒரு காரின் பின்புறம் கன்றை வைத்து எடுத்து சென்றனர்.
கார் கிளம்பியதும் கன்றை எங்கே எடுத்து செல்கிறார்கள் என நினைத்து பசு கன்றை பிரிய மனமில்லாமல் காரின் பின்னாடியே ஓட துவங்கியது.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தனது கன்றை பார்த்தபடியே காரின் பின்னாடி தாய் பசு ஓடியது.
விவசாயின் தொழுவத்தை அடைந்ததும் கன்றை இறங்கிவிட்டனர்.