வீட்டின் பூட்டினை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்கள்!
கூலி தொழிலாளியான மூக்காண்டி ராதாபுரம் அருகே கும்பிகுளத்தில் வசித்து வருகிறார்.
அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெருமாள் என்பவரின் மனைவி சரஸ்வதி.
மூக்காண்டி, அவருடைய மனைவி, சரஸ்வதி ஆகியோர் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளன
அப்போது அங்கு இரண்டு வீடுகளிலும் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இருவரது வீடுகளிலும் தலா 4 பவுன் தங்க சங்கிலிகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.